தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி, இலட்சத்தீவுகள் மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகத்தின் தெற்குப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது.[1]
பாரம்பரியத் தரவுகளில் தொல்காப்பியம் உள்ளிட்டவை இந்தப் பகுதிகளை ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகக் குறிப்பிடுகின்றன. இங்கு தமிழ் மொழியே இயல்பு மொழியாக இருந்தது[note 1] மேலும் அதன் அனைத்து குடிமக்களின் கலாச்சாரத்தையும் ஊடுருவியதாக இருந்தது.[note 2] ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.[4][5] பண்டைய தமிழ் நாடு இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டிருதது. அவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் சேரர், சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர்.

மாவட்டங்கள்
“சங்க காலத்தில் தமிழ்ப் பண்பாடு தமிழகத்திற்கு வெளியே பரவத் தொடங்கியது.[6] இலங்கை (இலங்கைத் தமிழர்) மற்றும் மாலைத்தீவுகள் (கிரவரு மக்கள்) ஆகியவற்றிலும் பண்டைய தமிழர் குடியிருப்புகள் நிறுவப்பட்டன. சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை ‘திராவிடா’ என குறிப்பிடப்பட்டுள்ளது.”
சங்க காலத்தில் தமிழ்ப் பண்பாடு தமிழகத்திற்கு வெளியே பரவத் தொடங்கியது.[6] இலங்கை (இலங்கைத் தமிழர்) மற்றும் மாலைத்தீவுகள் (கிரவரு மக்கள்) ஆகியவற்றிலும் பண்டைய தமிழர் குடியிருப்புகள் நிறுவப்பட்டன. சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை ‘திராவிடா’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமகால இந்தியாவில், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பேச்சாளர்கள் பெரும்பாலும் தமிழகம் என்ற பெயரைத் தமிழ்நாட்டை மட்டுமே குறிக்க பயன்படுத்துகின்றனர்.