நாள் முழுவதும் குப்பைகளைக் கக்கியபடியே நகரம் உறங்கிப் போன பிறகு, ஒரு வலுவான பெண் தொழிலாளர் படை மெல்ல வருகின்றது. நகரைப் பெருக்கி, குப்பைகளை அள்ளி, வண்டியில் ஏற்றி சுத்தம் செய்ய பெண் தொழிலாளர்கள் மெல்ல நகரில் படருகிறார்கள்.
பல நூற்றாண்டு பிரஞ்சுக் காலனியமாதிக்கத்திற்குப் பிறகு 1954- இல் இந்தியாவோடு இணைந்த புதுச்சேரி, இந்திய அழகியலும் பிரெஞ்சு கட்டடக்கலையும் சங்கமிக்கும் இடமாக உள்ளது. காலனியத்தின் எச்சங்களான வெள்ளை நகரம், போகன்வில்லா படரவிடப்பட்ட சுவர்கள், நகரைத்தழுவி நிற்கும் கடற்கரைகள் என உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்க்கும் அம்சங்களைக் கொண்ட நகரமாகப் புதுச்சேரி உள்ளது. இப்படிப்பட்ட நகரத்தில் குப்பைகளுக்குக் குறைவே இல்லை. நாள் முழுவதும் குப்பைகளைக் கக்கியபடியே நகரம் உறங்கிப் போன பிறகு, ஒரு வலுவான பெண் தொழிலாளர் படை மெல்ல வருகின்றது. நகரைப் பெருக்கி, குப்பைகளை அள்ளி, வண்டியில் ஏற்றி சுத்தம் செய்ய பெண் தொழிலாளர்கள் மெல்ல நகரில் படருகிறார்கள்.
அவர்கள் ஒப்பந்தப் பணியாளர்கள். புதுவை நகராட்சியின் நேரடி பணியாளர்கள் அல்ல. அவர்களது நாள் இரவு சுமார் 9.30 மணிக்குக் கம்பன் கலை அரங்கத்தில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து நகரின் பல பகுதிகளுக்குச் சென்று காலை 4 மணி வரை துப்புரவுப் பணியைச் செய்கிறார்கள். தொற்றுக்களிடமிருந்தும், கிருமிகளிடமிருந்தும் எந்தப் பாதுகாப்புமின்றி இரவு முழுவதும் துப்புரவுச் செய்து நகரைச் சுத்தமாக வைப்பதே இவர்களது அன்றாடம்.
கொரோனா தொற்றுப் பரவலுக்கு முன் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட போது கையுறையும் காலுக்குப் பூட்சும் கூட இல்லாமல் பெறும்பாலான நேரங்களில் வெறும் கைகளில் குப்பைகளைச் சேகரித்தும், அள்ளியும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். தினக்கூலியாக வெறும் 250 ரூபாய் மட்டுமே இவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. கடின உழைப்பைக் கோரும் இந்த ஆபத்தான வேலைக்கு அந்தக் கூலி மிகக்குறைவே. விடிந்ததும், நகரம் மெல்ல விழித்துக்கொள்ள நகரத்தின் நெரிசலில் கரைந்து வீடுகளுக்குச் செல்கிறார்கள். அங்கும், அன்றாட வீட்டுவேலைகள் இந்த பெண்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. பகல் முழுவதும் அவற்றிற்க்கு உழைப்பைச் சிந்த, மிகச் சொற்ப ஓய்வை மட்டுமே இவர்கள் பெறுகிறார்கள்.
தற்போதைய கொரோனா தொற்று இவர்களது நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது. தொற்றுக்கு எதிரான முதல் நிலைப் போராளிகளான இவர்கள் தரமற்ற முகக்கவசங்களையும், மலிவான கையுறைகளையும் அதே கூலியையும் தவிற வேறு எதையும் பெறுவதில்லை.
இந்த பதிவை/படங்களை குறிப்பிடும் முறை:
The Invisible Women Who Keep the City Clean by Muhammed Shafi is licensed under a Creative Commons Attribution 4.0 International License.