Month: July 2020

க. காவியா கவிதைகள்

1. என்னிலிருந்து பாயும் அன்பு நரம்பினைத் துண்டித்துவிடு உன் கூரிய சொற்களைக் கொண்டு என் அன்பு திசையில்லாத திட்டில் எரிந்து போன மலர்கள் உனக்கான அன்பு தேங்கித் தேங்கி என்னுடல் முழுதும் பரவட்டும் நிராகரிக்கப்பட்ட அன்பு என்னிடத்திலேயே மிதக்கட்டும் இதமான முள்ளாக…

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (EIA 2020) – பேரழிவுத் திட்டமும் நாம் செய்ய வேண்டியதும்

பெருந்தொற்று, காலநிலை மாற்றம், நிலத்தடிநீர் உவர்நீராதல்… இவை எல்லாம் எப்படி நிகழ்ந்திருக்கின்றன என்று நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே வந்திருக்கிறது சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (EIA 2020) இது ஏற்கனவே இருந்த சூழலியல் தாக்க மதிப்பீடு (1994, 2006) -இல் மாற்றங்கள்…

இலக்கணமும் சமூக உறவுகளும்: நூல் மதிப்புரை

இந்நூலானது உற்பத்தி என்பது குறித்தும், உற்பத்தி முறைமைகள் உற்பத்தி உறவுகளுக்கு எவ்வகையில் வழிவகுக்கின்றன என்பது குறித்தும், இவற்றிற்கும் மொழிக்கும் இடையேயுள்ள தொடர்பினையும் எடுத்துக்கூறி அவற்றின்வழித் தமிழ் - சொல்லிலக்கண அமைப்பின் திணை, பால், எண், வேற்றுமை, வினையமைப்பு ஆகியன மக்களிடையே இருந்த…

அழியா வரலாற்று ஆவணக் களஞ்சியம் வாழும் மூதாதையர்கள் (தமிழகப் பழங்குடிகள்) – நூல் அறிமுகம்

பழங்குடிகள் என்ற சொல் நம்மையும் அவர்களையும் பிரித்து நெடுந்தொலைவில் வைத்திருக்கிறது. வாழும் மூதாதைகள் என்றால் இவருக்குமான இடைவெளியைக் குறைத்து மிக நெருக்கமாக வைப்பதாக உணர முடிகிறது.

கோவிட் -19 சீனாவின் உயிர் ஆயுதமா?

இது ஆய்வகத்தில் உருவாக்கிய வைரஸ் அல்ல, இயற்கையாக உருவானது தான் என்பதை நிரூபிக்க ஏராளமான சான்றுகள் உள்ளபோதிலும், இனவாதத்தைத் தூண்டுவதற்கான கருவியாகக் கோவிட்-19-யைப் பயன்படுத்துவது பெரும் குற்றமாகும்.

அறிவிப்பு: புதுவைப் பல்கலைக்கழகம் 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கானச் சேர்க்கை

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகம், புதுவைப் பல்கலைகழக மாணவர் பேரவை, வளாகத்தில் செயல்படும் மாணவரமைப்புகள் என பலதரப்பில் உதவிக் குழுக்கள் (help desk) அமைத்து உதவி செய்து கொண்டிருக்கின்றன. இந்திய மாணவர் சங்கம் பல்கலைக்கழக நுழைவுத்தேர்விற்கு…

மாநகரத்தை தூய்மையாக்கும் புலப்படாத பெண்கள்

நாள் முழுவதும் குப்பைகளைக் கக்கியபடியே நகரம் உறங்கிப் போன பிறகு, ஒரு வலுவான பெண் தொழிலாளர் படை மெல்ல வருகின்றது.