Silver Jublee

PU என்றழைக்கப்படும் புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University) 1985ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மத்தியப் பல்கலைக்கழகம். விசாலமான வளாகம், அதிநவீன வகுப்பறைகள், உயர்தர ஆய்வுக்கூட வசதிகள், கணிசமான மேற்கோள்களைப் பெரும் சமூக/அறிவியல் ஆய்வுப் பணிகள், வளமிக்க நூலகம், காஸ்மோபாலிட்டன் வாழ்க்கைச் சூழல், ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணம் ஆகியன இப்பல்கலைகழகத்தின் சிறப்பம்சம். ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகள் (Integrated P.G courses), முதுநிலை பட்டப் படிப்புகள் (P.G courses), முதுநிலை பட்டயப் படிப்புகள் (P.G Diploma Courses), முனைவர் பட்டப் படிப்புகள் (Ph.D) என நான்கு நிலை படிப்புகளிலும் நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்து சுமார் 6500-கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயில்கின்றனர்.

ஒரு சில பாடப்பிரிவுகள் தவிர அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் பல்கலைக்கழகம் நடத்தும் இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு மூலமே சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நுழைவுத்தேர்வு இந்திய மாணவர்களுக்கு மட்டுமே. வெளிநாட்டு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு தேவை இல்லை. M.B.A.- Business Administration (General MBA), M.B.A. International Business, M.B.A. Tourism & Travel Management, M.B.A. Business Analytics General ஆகிய பாடப்பிரிவுகளுக்கு CAT Score 2019 அடிப்படையிலும், M.Sc.Biotechnology, M.Tech Computational Biology ஆகிய பாடப்பிரிவுகளுக்கு GAT-B மதிப்பெண் அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும். ஆகஸ்ட் 21, 22, 23 தேதிகளில் இணையம் வழி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 8, 2020 முதல் ஜூலை 31, 2020 வரை பல்கலைக்கழக இணையத்தளத்தின் (http://www.pondiuni.edu.in/content/admissions-2020-21)  வழி விண்ணப்பிக்கலாம், வேறு வழிகளில் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பக் கட்டணம்

பல்கலைக்கழக நிர்வாகம், புதுவைப் பல்கலைகழக மாணவர் பேரவை, வளாகத்தில் செயல்படும் மாணவரமைப்புகள் என பலதரப்பில் உதவிக் குழுக்கள் (help desk) அமைத்து உதவி செய்து கொண்டிருக்கின்றன. இந்திய மாணவர் சங்கம் பல்கலைக்கழக நுழைவுத்தேர்விற்கு நான்காவது வருடமாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்துவதாக அதன் சமூகவலைதளப் பக்கங்களில் அறிவித்துள்ளது.

சேர்க்கையின்போது செலுத்த வேண்டிய கட்டணம்

பாடப்பிரிவுசேர்கியின்போது கட்ட வேண்டிய கட்டணம்
Five Year Integrated MA
(History/Sociology/Political Science)
Rs. 20,701
Five Year Integrated M.Sc. (Physics/Chemistry/Applied Geology/Mathematics/Statistics/Computer Science)Rs. 22,701
*விடுதி கட்டணங்கள் நீங்கலாக.
பாடப்பிரிவுசேர்கியின்போது கட்ட வேண்டிய கட்டணம்
MA (Economics தவிர்த்து எல்லா MA படிப்புகளுக்கும்) ₹19,018.00
M.A Economics ₹20,518.00
M.Sc ( Computer Science தவிர்த்து எல்லா M.Sc. படிப்புகளுக்கும்) ₹23,018.00
M.Sc (Computer Science) ₹34,318.00
M.Com ₹20,518.00
MBA ₹66,718.00
MCA  ₹34,118.00
M.Tech (Computer Science, Network & Information Security தவிர்த்து எல்லா M.Tech. படிப்புகளுக்கும்) ₹23,018.00
M.Tech. Computer Science & Engineering ₹34,318.00
M.Tech (Network & Information Security) ₹34,318.00
M.Lib.I.S ₹20,518.00
M.P.Ed ₹20,518.00
M.Ed ₹20,518.00
M.P.A ₹20,518.00
P.G. Diploma Programmes ₹20,459.00
LLM  ₹22,459.00
*விடுதி கட்டணங்கள் நீங்கலாக.
பாடப்பிரிவுசேர்கியின்போது கட்ட வேண்டிய கட்டணம்
Ph.D in Science Departments (Internal/External)24551
Ph.D in Arts Department (Internal/External)17551
* Applied Psychology, Mathematics, Statistics, Library and Information Science ஆகிய துறைகளுக்கு கலை துறைகளுக்கான கட்டணம் செலுத்தினால் போதும். இக்கட்டணங்கள் விடுதி கட்டணங்கள் நீங்கலாக.

ஐந்தாண்டு – ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகள்:

SlnoCourse
1Five year Integrated M.Sc Programme  (Applied Geology, Chemistry, Physics)
2Five year Integrated M.Sc Programme  (Mathematics, Computer Science, Statistics)
3Five year Integrated M.A. Programme  (History, Political Science, Sociology)
4Five year Integrated M.A. SEAL Programme Social & Economic Administration and Law 

ஐந்தாண்டு Five Year Integrated M.A History/Sociology/Political Science ஆகிய பாடப்பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் +2வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். மூன்று பாடப்பிரிவிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு எழுதினால் போதும். நுழைவு தேர்வில் +2 மட்டத்திலுள்ள சமூக அறிவியல் தொடர்பாக 100 கொள்குறி (Multiple Choice) கேள்விகள் கேட்கப்படும். நுழைவுத்தேர்வு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் கலந்தாலோசனை (counseling) முறையில் சேர்க்கை நடைபெறும்.

ஐந்தாண்டு Integrated M.SC Physics/Chemistry/Applied Geology ஆகிய பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியல்,கணிதம் ஆகிய பாடங்களைக் கொண்ட +2வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறவேண்டும். மூன்று பாடப்பிரிவிற்கும் ஒரே நுழைவுத்தேர்வு எழுத்தியல் போதுமானது. நுழைவு தேர்வில் +2 மட்டத்திலுள்ள இயற்பியல், வேதியல், கணிதம் ஆகிய படங்களிலிருந்த்து 100 Multiple Choice கேள்விகள் கேட்கப்படும். கேள்விகளில் இயற்பியல், வேதியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் சாமமான முக்கியத்துவம் அளிக்கப்படும். நுழைவுத்தேர்வு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் கலந்தாலோசனை (counseling) முறையில் சேர்க்கை நடைபெறும்.

ஐந்தாண்டு Integrated M.Sc Maths/ Statistics/Computer Science ஆகிய பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்களும் இயற்பியல், வேதியல்,கணிதம் ஆகிய படங்களை கொண்ட +2வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்று பாடப்பிரிவிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு எழுதினால் போதுமானது. நுழைவுத் தேர்வில் (+2 மட்டத்திலான) கணிதம் பாடத்திலிருந்து 80 கேள்விகளும், அடிப்படை புள்ளியியல் (Basic Statistics) தொடர்பான 20 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அனைத்தும் Multiple Choice வடிவில் இருக்கும். நுழைவுத்தேர்வு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் கலந்தாலோசனை (counseling) முறையில் சேர்க்கை நடைபெறும்.

இந்த ஆண்டு பாரிஸ் 1 என்றழைக்கப்படும் University of Paris 1 Pantheon-Sorbonne-ம் புதுவை பல்கலைக்கழகமும் இணைந்து Integrated M.A. SEAL (Social & Economic Administration and Law) எனும் ஒரு புதிய பாடப்பிரிவை அறிமுகம் செய்கிறது. இது புதுவை பல்கலைக்கழகத்திற்கும் பாரிஸ் 1 பல்கலைக்கழகத்திற்கும் 2019 உண்டானப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பயனால் விளைந்த ஐந்தாண்டு multi-disciplinary பாடத்திட்டமாகும். இந்த பாடத்திட்டத்தின்படி முதல் இரண்டு ஆண்டுகள் புதுவைப் பல்கலைகழகத்தின் SEAL மாணவர்கள் புதுவை பல்கலைக்கழகத்திலும், பாரிஸ் 1 பல்கலைக்கழக மாணவர்கள் பாரிஸ் 1 பல்கலை கழகத்திலும் பயில்வார்கள். மூன்றாம் ஆண்டு புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பாரிஸ் 1 பல்கலைக்கழகத்திலும் பாரிஸ் -1 பல்கலைக்கழக மாணவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத்திலும் பயில்வார்கள். மூன்றாம் ஆண்டு நிறைவில் அனைத்து SEAL மாணவர்களுக்கும் வெளியேறும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதாவது மூன்றாம் ஆண்டு நிறைவில் வெளியேறும் பட்சத்தில் பாரிஸ் 1 பல்கலைக்கழகத்தின் “Licence Administration Économique et Sociale” மற்றும் புதுவைப் பல்கலைக்கழகத்தின் Bachelor of Arts in Social, Economic Administration and Law (BA SEAL) ஆகிய இரட்டைப் பட்டம் வழங்கப்படும். மூன்று ஆண்டு கழிந்து 4,5ஆம் ஆண்டு தொடரும் பட்சத்தில் அனைத்து SEAL மாணவர்களும் புதுவை பல்கலைக்கழகத்தில் பயில வேண்டும். ஐந்தாம் ஆண்டு நிறைவில் பாரிஸ் 1 பல்கலைக்கழகத்தின் “Licence Administration Économique et Sociale” மற்றும் புதுவை பல்கலைக்கழகத்தின் Master of Arts in Social, Economic Administration and Law (MA SEAL) ஆகிய இரட்டைப் பட்டம் வழங்கப்படும். இப்பாடத்திட்டத்தில் சேர இந்திய மாணவர்கள் +2வில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றால் போதுமானது.

நுழைவுத் தேர்விற்கு தயாராகுபவர்கள் பாடப்பிரிவு தொடர்பான +1, +2 NCERT பாடப்புத்தகங்களை அடிப்படையாக வைத்துத் தயார் செய்வது உதவும் என்று கடந்த ஆண்டு நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு வினாத்தாள்களை திருப்பிப் பார்ப்பதும் கைகொடுக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

முதுநிலை பாடப்பிரிவுகள்:

SlnoCourse
1LL.M
2M.A.  Anthropology
3M.A.  Economics
4M.A.  English & Comparative literature
5M.A.  French (Translation & Interpretation)
6M.A.  Hindi 
7M.A.  History
8M.A. Human Rights and Inclusive Policy
9M.A.  Mass Communication
10M.A.  Philosophy
11M.A.  Political Science
12M.A.  Politics & International Relations
13M.A.  Sanskrit 
14M.A.  Sociology
15M.A.  South Asian Studies
16M.A.  Tamil
17M.A. Women Studies
18M.C.A. (Computer Applications)
19M.Com. Accounting & Taxation
20M.Com. Business Finance
21M.Ed. Master of Education
22M.Lib.I.S. (Library and Information Science)
23M.P.A. Performing Arts (Theatre Arts)
24M.P.Ed. (Physical Education ) 
25M.S.W. (Social Work)
26M.Sc.  Applied Geology
27M.Sc.  Applied Psychology
28M.Sc.  Biochemistry & Molecular Biology
29M.Sc.  Bioinformatics
30M.Sc.  Biotechnology
31M.Sc.  Chemistry
32M.Sc.  Computer Science
33M.Sc.  Disaster Management studies
34M.Sc.  Ecology 
35M.Sc.  Electronic Media   
36M.Sc. Environmental Sciences
37M.Sc.  Food Science & Nutrition
38M.Sc.  Food Science & Technology
39M.Sc.  Marine Biology
40M.Sc.  Mathematics
41M.Sc.  Microbiology
42M.Sc.  Physics 
43M.Sc.  Quantative Finance
44M.Sc.  Statistics
45M.Tech. Computational Biology
46M.Tech. Computer Science & Engineering
47M.Tech. Communication & Information System
48M.Tech. Electronics & Communication Engineering
49M.Tech. Environmental Engineering & Management
50M.Tech. Green Energy Technology
51M.Tech. Nanoscience & Technology
52M.Tech. Network & Information Security
53MBA – PART TIME
54MBA Banking Technology
55MBA Financial Technology
56MBA Insurance Management
57MBA Logistics & Supply Chain Management
58P.G. Diploma Criminology & Forensic Science
59P.G. Diploma Green Energy Technology
60P.G. Diploma Intellectual Property Rights
இந்த ஆண்டு முது நிலை பாடப்பிரிவுகளிலும் பல்கலைக்கழகம் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
  1. பல பாடப்பிரிவுகளில் காலியிடங்களை அதிகப்படுத்தியுள்ளது.
  2. MSc. Ecology and environmental Science என்றிருந்த பாடப்பிரிவு இந்த ஆண்டு MSc Ecology, MSc Environmental Sciences என இரண்டு பாடப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
  3. M-Tech exploration Geoscience இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. (not offered)
  4. Diploma in Forensic and Anthropology இந்த ஆண்டு வழங்கப்படவில்லை.
  5. MBA Financial Technology, MBA Business Administration (part time), MBA Logistics & Supply Chain Management ஆகிய மூன்று புதிய சுயநிதிப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
  6. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட Genomic Sciene, Nano Science and Technology, Biotechnology ஆகிய சுயநிதி பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு வழங்கப்படவில்லை.

முனைவர் பட்ட பாடப் பிரிவுகள்:

Sl noCourse
1Ph.D. Botony
2Ph.D. Bioinformatics
3Ph.D. Biotechnology
4Ph.D. Civil Engineering 
5Ph.D. Chemistry
6Ph.D. Commerce
7Ph.D. Computer Science & Engineering/ Computer Science
8Ph.D. Earth Sciences 
9Ph.D. Ecology
10Ph.D. Education
11Ph.D. Electronic and Communication Engineering 
12Ph.D. Electrical & Electronics Engineering
13Ph.D. English 
14Ph.D. Environmental Technology
15Ph.D. Green Energy Technology
16Ph.D. Hindi
17Ph.D. Home Science
18Ph.D. Management 
19Ph.D. Marine Biology
20Ph.D. Mass Communication
21Ph.D. Mathematics
22Ph.D. Mechanical Engineering
23Ph.D. Medical Entomology
24Ph.D. Medical Microbiology
25Ph.D. Microbiology
26Ph.D. Nanoscience & Technology
27Ph.D. Nursing
28Ph.D. Pharmacy
29Ph.D. Physical Education & Sports
30Ph.D. Physics
31Ph.D. Sanskrit
32Ph.D. Sociology
33Ph.D. Statistics 
34Ph.D. Tamil
35Ph.D. Zoology
36Ph.D Zoo geography
  • இந்த ஆண்டு Anthropology, Biochemistry & Molecular Biology, Commerce (Karaikal campus), Economics, International Business, Mathematics, Social Work, Tourism Studies ஆகிய துறைகளில் JRF தகுதி பெற்றவர்களை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • இந்த ஆண்டு Adult & Continuing Education, Applied Psychology, Asian Christian Studies, Banking Technology, Disaster Management (Port Blair, Andamans), Drama & Theatre Arts, Ecology & Environmental Sciences, Electronic Media , English, European Studies, Food Science & Nutrition, Food Science &Technology, French, History, Law, Library & Information Science, Maritime Studies, Philosophy, Politics & International Studies, Social Exclusion and Inclusive Policy, Southern Asia Studies, Tamil, Women’s Studies ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்க்கை நடைபெறவில்லை.
Ph.D சேர்க்கை நடைபெறும் முறை:

JRF தகுதி பெற்றவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதத் தேவையில்லை. நேரடியாக அதற்காக கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சென்று விண்ணப்பிக்கலாம். JRF தகுதி பெறாதவர்களுக்கு பல்கலைகழகத்தின் நுழைவுத் தேர்வு வழி சேர்க்கை நடைபெறும். நுழைவுத் தேர்விற்கு பின்னர் தரவரிசை வெளியிடப்படும். ஓரோர் காலி இடத்திற்கும் (vacancy) நுழைவு தேர்வு மதிப்பெண் தரவரிசையின் அடிப்படையில் மூன்று விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவர். உதாரணத்திற்கு ஒரு துறையில் 4 காலியிடங்கள் என வைத்துக்கொண்டால் அதில் இரண்டு இடம் பொதுப் போட்டிக்கும், ஒரு இடம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், ஒரு இடம் SC/ST பிரிவினருக்கும் ஒதுக்கப்படும். அந்த இரண்டு பொதுப் பிரிவில் உள்ள காலியிடங்களை நிரப்ப நுழைவுத் தேர்வில் முதல் ஆறு தரவரிசை பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரரின் ஆய்வுமுன்மொழிவு, துறை சார்ந்த அறிவு ஆகியவை சோதிக்கப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும். பின் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணிற்கு 70% முக்கியத்துவமும் (weight-age) நேர்முகத்தேர்வு மதிப்பெண்ணிற்கு 30% முக்கியத்துவமும் அளித்து தரவரிசை தயாரிக்கப்படும். முதல் இரண்டு இடம் பிடிக்கும் நபரை கொண்டு அந்த இரண்டு காலி இடங்கள் நிரப்பப்படும். OBC பிரிவினருக்கான ஒரு காலியிடமும், SC/ST பிரிவினருக்கான ஒரு இடமும் அந்த அந்த பிரிவில் முதல் மூன்று தரவரிசை பெற்ற நபர்களை நேர்முகத் தேர்விற்கு அழைத்து மேற்குறிப்பிட்ட முறையில் நிரப்பப்படும்.


பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகம், புதுவைப் பல்கலைகழக மாணவர் பேரவை, வளாகத்தில் செயல்படும் மாணவரமைப்புகள் என பலதரப்பில் உதவிக் குழுக்கள் (help desk) அமைத்து உதவி செய்து கொண்டிருக்கின்றன. இந்திய மாணவர் சங்கம் பல்கலைக்கழக நுழைவுத்தேர்விற்கு நான்காவது வருடமாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்துவதாக அதன் சமூகவலைதளப் பக்கங்களில் அறிவித்துள்ளது. சேர்க்கை குறித்த சந்தேகங்கள் அல்லது உதவி வேண்டுமெனில் [email protected] எனும் மின்னஞ்சல் வழி அல்லது இப்பதிவின் பின்னுட்டங்கள் வழி கரும்பலகை.in-ஐயும் அணுகலாம்.

அதிகாரபூர்வ தகவலுக்கு புதுவை பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக்கான பக்கத்தில் http://www.pondiuni.edu.in/content/admissions-2020-21 காண்க.

Creative Commons License
Glittering SJ Nights by Prabha Bharathi is licensed under a Creative Commons Attribution 4.0 International License.

Creative Commons License
அறிவிப்புபுதுவைப் பல்கலைக்கழகம் 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கானச் சேர்க்கை by முசாஃபிர் is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Based on a work at http://www.pondiuni.edu.in/content/admissions-2020-21.