பழம் பெருமைகள்
பசி தீர்க்க
போதுமானதாய் இருந்தன
அவர்களுக்கு
சகிப்புத்தன்மையற்ற
சந்தர்ப்பவாதிகளிடம்
சிக்கித் தவிக்கும்
சாவி திருகிய
பொம்மைகள் அவர்கள்
அவர்களது
குரூரக் கண்கள்
குறை சொல்வதற்கே
குடியமர்த்தப்பட்டன
மாற்றங்கள்
மடை மாற்றங்களாய்
மாறிப்போயின
அவர்களுக்கும்
அடிமைகள் இருப்பதனால்
தாங்கள் யாருக்கு அடிமை
என்ற கேள்வி
துளியும் தோன்றுவதில்லை
ஆம்
அவர்கள்
கடவுளின் பிள்ளைகள்
கடவுள் உடலின்
கண்ட இடங்களில்
இருந்து பிறந்தோம்
என்ற அறிவியலை
நம்புபவர்கள்
- த.வ.அநார்யா
அநார்யா கவிதைகள் -2 by த வ அநார்யா is licensed under a Creative Commons Attribution 4.0 International License.